அமானுஷ்யம் நிறைந்த ஜின்!

அமானுஷ்யம் நிறைந்த ஜின்!

செய்திகள் 6-May-2015 3:15 PM IST VRC கருத்துக்கள்

திகில் நிறைந்த அசாதாரணமான அமானுஷ்ய சக்திகளை பற்றிய கதையாக உருவாகி வரும் படம் ’ஜின்’. மூன்று நாட்களில், ஐந்து நண்பர்கள் வாழ்வில் ஏற்படும் ஒரு அமானுஷ்ய நிகழ்வை மையாகக் கொண்ட இப்படத்தை ‘ரைட் மீடியா ஒர்க்ஸ்’ மற்றும் சதீஷ் சந்திரசேகரனின் கதைகள் நிறுவனங்களின் கூட்டு தயாரிப்பில் உருவாகி வருகிறது.

இப்படத்தை பற்றி அறிமுக இயக்குனர் சதீஷ் சந்திரசேகரன் கூறுகையில் “ கலையரசன், ‘மெட்ராஸ்’ ஹரி, காளி வெங்கட், அர்ஜுனன், 'முண்டாசுப்பட்டி' முனீஸ் காந்த் ஆகிய சாதாரணமான ஐந்து நண்பர்களின் பிரயாணத்தில் ஏற்படும் அசாதாரணமான நிகழ்வை சுற்றி அமைந்ததே ‘ஜின்’ திரைப்படத்தின் கதை. எம்.ஜி.ஆர்-ன் ‘அன்பே வா’, ரஜினிகாந்தின் ‘தம்பிக்கு எந்த ஊரு’ படங்களில் வந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் பழமையான பங்களாவில் இதன் படபிடிப்பை நடத்தினோம். மறுபட்ட ஒரு கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படம் அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற படமாக இருக்கும்’’ என்றார்.

இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, ராதன் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

உரு - டிரைலர்


;