இயக்குனர் சங்கத்திற்கு கல்வியாளர்கள் உதவி!

இயக்குனர் சங்கத்திற்கு கல்வியாளர்கள் உதவி!

செய்திகள் 6-May-2015 2:17 PM IST VRC கருத்துக்கள்

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க கூட்டம் இன்று வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் காலை 9 மணியளவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கல்வியாளர்களான ஜெகத்ரட்சகன், ஏ.சி.சண்முகம், ஐசரி கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கல்லூரிகளில் படிக்க இயக்குனர் சங்க உறுபினர்களின் பிள்ளைகள் படிக்க தலா 30 இடங்களை இலவசமாக அளித்துள்ளனர்.

கலை அறிவியல் கல்லூரியில் படிக்க ஜெகத்ரட்சகன் 20 சீட்டுகள், ஏ.சி. சண்முகம் 20 சீட்டுகள், ஐசரிகணேசன் 20 சீட்டுகள் என்று மொத்தம் அறுபது சீட்டுகள் இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக இந்த விழாவை ஏற்பாடு செய்தனர்.

மற்றும் விழாவில் இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன் தனது உடலை சென்னை அரசு மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்குவதாக அறிவித்துள்ளார். மற்றும் செயற்குழு உறுப்பினர்களும், நிர்வாகிகளும் உடல் உறுப்பு தானம் செய்வதாக அறிவித்துள்ளனர்.
விழாவில் இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி, வி.சேகர்,எஸ்.ஏ.சந்திரசேகர், மனோபாலா, கே.பாக்யராஜ், பாண்டியராஜன், கே.எஸ்.ரவிகுமார்,பாலா, , சித்ராலட்சுமணன், ராமதாஸ், ரமேஷ்கண்ணா, ரவிமரியா, விஜய், தயாரிப்பாளர் கலைபுலி.எஸ்.தாணு, கே.ஆர், பொன்வண்ணன்,ஆர்.கண்ணன் மற்றும் ஏராளமான இயக்குனர்கள் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நினைத்தது யாரோ


;