‘‘என் சிறுவயது வாழ்க்கையை ஞாபகப்படுத்திய காக்கா முட்டை!’’

‘‘என் சிறுவயது வாழ்க்கையை ஞாபகப்படுத்திய காக்கா முட்டை!’’

செய்திகள் 6-May-2015 12:35 PM IST VRC கருத்துக்கள்

’சலாம் பாம்பே’, ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ பட வரிசையில் இடம் பிடிக்கப் போகிறது மணிகண்டன் இயக்கியுள்ள ‘காக்கா முட்டை’ படம்! குடிசை வாழ் மக்களின் கதையை யதார்த்தமாக சொல்லும் படம் இது என்பதற்கு நாம் பார்த்த இப்படத்தின் சில முன்னோட்ட காட்சிகளே போதுமானது! சென்னை சைதாபேட்டை பாலம் அருகில் உள்ள குடிசை பகுதியில் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு நடந்துள்ளது. இதில் பெரிய காக்கா முட்டை கேரக்டரில் சிறுவன் ரமேஷ் நடித்திருக்க, சிறிய காக்கா முட்டை கேரக்டரில் சிறுவன் விக்னேஷ் நடித்திருக்கிறான். இவர்களது தாயாக வித்தியாசமான தோற்றத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார்.

இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன் பள்ளியில் ஒளிப்பதிவு கற்றுகொண்ட மணிகண்டன் எழுதி, இயக்கியுள்ள ‘காக்கா முட்டை’யை தயாரித்திருப்பது தனுஷின் ‘வுண்டர்பார்’ நிறுவனமும், வெற்றிமாறனின் ’கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி’யும் இணைந்து தான்! இப்போது இப்படத்தின் தயாரிப்பு மற்றும் புரொமோஷனில் பிரபல ‘ஃபாக்ஸ் ஸ்டார்’ நிறுவனமும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே தேசிய விருதுகள் உட்பட பல விருதுகள் பெற்றுள்ள ‘காக்கா முட்டை’ படம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய முயற்சியாக இருக்கும் என்பதற்கு இப்படத்திற்கு இதுவரை கிடைத்துள்ள பாராட்டுக்களும், விருதுகளும் போதுமானது!

இந்த படம் குறித்து தனுஷ் பேசும்போது, ‘‘இந்த படத்தின் கதையை படித்ததும் என்னோட சிறுவயது காலம் தான் என் ஞாபத்திற்கு வந்தது. இந்த கதையில் வரும் பெரிய காக்கா முட்டை கேரக்டர் என் அண்ணன் செல்வா என்றால் சிறிய காக்கா முட்டை கேரக்டர் நான் தான்! இதை சொல்லிக் கொள்வதிலும், இதுபோன்ற ஒரு படத்தை தயாரித்ததிலும் எனக்கு பெருமைதான்! இந்த ‘காக்கா முட்டை’ படம் கமர்ஷியல் சினிமாவின் இன்னொரு முகமாக இருக்கும்’’ என்றார் நேற்று நடந்த இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில்! ‘காக்கா முட்டை’ விரைவில் ரிலீசாகவிருக்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;