சல்மான் கான் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!

சல்மான் கான் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!

செய்திகள் 6-May-2015 11:45 AM IST VRC கருத்துக்கள்

கடந்த 2002-ஆம் ஆண்டு நடந்த கார் விபத்து வழக்கில் சிக்கிய பாலிவுட் நடிகர் சல்மான் கான் குற்றவாளி என்று மும்பை நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. சல்மான் கானுக்கு எதிரான குற்றசாட்டுகள் அனைத்தும் நிரூபணம் ஆகியுள்ளன என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர். விபத்துக்கு உள்ளான காரை ஓட்டியது அவரது ஓட்டுனர் என்று வாதிட்ட நிலையில் காரை ஓட்டியது டிரைவர் அல்ல என்றும், சல்மான் கான் தான் காரை ஓட்டியுள்ளார் என்பதும் நிரூபணமாகியுள்ளது என்றும் அந்த தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். சல்மான் கானுக்கான தண்டனை விவரம் இன்னும் சில மணி நேரங்களில் தெரிய வரும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சுல்தான் - டிரைலர்


;