தொடர்ந்து 17 மணிநேரம் டப்பிங் பேசிய கவுண்டமணி!

தொடர்ந்து 17 மணிநேரம் டப்பிங் பேசிய கவுண்டமணி!

செய்திகள் 6-May-2015 10:42 AM IST VRC கருத்துக்கள்

‘ஓப்பன் தியேட்டர்’ என்ற புதிய படம் நிறுவனம் சார்பில் எஸ்.மணி தயாரித்துள்ள படம் ‘வாய்மை’. அறிமுக இயக்குனர் செந்தில் குமார் இயக்கியுள்ள இப்படத்தில் சாந்தனு முக்கிய கேரக்டரில் நடித்திருக்க ஹீரோயினாக முக்தா பானு நடித்துள்ளார். இவர்களுடன் பிருத்திவி ராஜன், கவுண்டமணி, தியாகராஜன், பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், மனோஜ் பாரதி உட்பட பல முக்கிய நடிகர், நடிகைகள் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனர் செந்தில் குமார் பேசும்பொது, ’‘ஒரு ராத்திரியில் எழுதிய கதை இது. இப்படத்தில் நடித்திருக்கும் அத்தனை பேருக்கும் கதையில் மிக முக்கியத்துவம் இருக்கும். அதில் கவுண்டமணி சார் ஏற்றிருக்கும் வேடமும் மிக முக்கியமானது. அவர் இப்படத்திற்காக தொடர்ந்து 17 மணி நேரம் டப்பிங் பேசி, எங்களையெல்லாம் ஆச்சர்யப்பட வைத்தார். இந்த படம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு படமாக இருக்கும்’’ என்றார்.

100 குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டாலும் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது என்பது தான் இப்படத்தின் கதை கருவாம்! அதை ஆக்‌ஷன், அதிரடி சண்டை காட்சிகளுடன் எடுத்துள்ளாராம் இயக்குனர். அறிமுக இசை அமைப்பாளர் ஆகத் இசை அமைத்திருக்கும் இப்படம் மிக விரைவில் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆங்கில படம் - டிரைலர்


;