‘புறம்போக்கு’ பற்றி மனம் திறந்த விஜய்சேதுபதி!

‘புறம்போக்கு’ பற்றி மனம் திறந்த விஜய்சேதுபதி!

செய்திகள் 5-May-2015 4:47 PM IST Chandru கருத்துக்கள்

விஜய் சேதுபதி, ஆர்யா, ஷாம், கார்த்திகா நடிப்பில், எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் யுடிவி மோஷன் பிக்சர்ஸ் மற்றும் பைனரி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’. இப்படம் மே 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், படத்தில் தனது கதாப்பாத்திரத்தைப் விஜய் சேதுபதி பற்றி கூறும் பொழுது...

“இப்படத்தில் நான் ‘எமலிங்கம்’ என்ற ரயில்வே தொழிலாளியாக வருகிறேன். நகரும் ரயில் வண்டியின் ஓசையும், ரயில்வே தொழிலாளியின் பரபரப்பும் என்னுள் அடங்கவே இல்லை. வேறு எந்த கதாநாயகனும் செய்யாத கதாப்பாத்திரம் என்று நான் தைரியமாக சொல்வேன். எமலிங்கம், ரசிகர்கள் அதிகம் கண்டிராத ஒரு கதாப்பாத்திரமாக இருக்கும். எனது வாழ்நாளில் நான் நடித்த நல்ல கதாப்பாத்திரங்களில் ஒன்றாக இது இருக்கும்.

இந்தக் கதாப்பாத்திரத்திற்காக பிரத்யேக பயிற்சி என்று எதுவும் எடுக்கவில்லை. உண்மையை சொல்லப்போனால் நடிப்பு என்பது அந்தக் கதாப்பாத்திரத்தின் குணாதிசயங்களையும், பின்புலத்தையும் முழுமையாக உணர்ந்தாலே போதுமானது. எமலிங்கம் என்ற கதாப்பாத்திரத்தின் புதுமைக்காக சற்றே உடல் எடையை கூட்ட வேண்டியிருந்தது. மேலும் இக்கதாபாத்திரத்தை புரிந்துக் கொள்ளும் வகையில் நன்கு விளக்கினார்.”

‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ படம் ஒரு வழக்கமான திரைப்படம் கிடையாது. ஆழமான சமூக கருத்தூன்றிய கதையம்சம் கொண்டது. நான், ஆர்யா, ஷாம், கார்த்திகா என எங்கள் அனைவருக்குமே படப்பிடிப்பு நாட்கள் முழுவதும் இனிமையாகக் கழிந்தது. படத்தில் யாருக்கு எவ்வளவு முக்கியத்துவம் என்று தெரியாது. ஜனநாதன் சாரின் கதையில் எங்களுக்கு என்று ஒரு இடமும், அதில் நன்றாக நடிக்க வாய்ப்பும் இருந்தது!” எனக் கூறினார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;