‘காக்கா முட்டை’ சிறுவர்களின் படிப்புச் செலவை ஏற்ற தனுஷ்!

‘காக்கா முட்டை’ சிறுவர்களின் படிப்புச் செலவை ஏற்ற தனுஷ்!

செய்திகள் 5-May-2015 2:55 PM IST Chandru கருத்துக்கள்

தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ நிறுவனமும், வெற்றிமாறனின் ‘கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி‘யும் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘காக்க முட்டை’. ரமேஷ், விக்னேஷ் என இரண்டு சிறுவர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்தை வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய எம்.மணிகண்டன் இயக்கியிருக்கிறார். இப்படம் தேசிய விருதை வென்றிருப்பதோடு, பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பங்கெடுத்து பெரிய அளவில் பாராட்டுக்களை குவித்திருக்கிறது.

இந்நிலையில் ‘காக்கா முட்டை’ படக்குழு இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து. இதில் தனுஷ், வெற்றிமாறன் உட்பட படக்குழுவைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டார்கள். நடிகரும், தயாரிப்பாளருமான தனுஷ் பேசும்போது ‘‘படம் வெளிவருவதற்கு முன்பே ‘காக்கா முட்டை’ திரைப்படம் லாபத்தை ஈட்டித் தந்திருக்கிறது. இனி வெளிவந்து கிடைக்கும் ஒவ்வொரு காசும் எனக்கு கூடுதல் லாபமே. இதனால் பெரிய சந்தோஷத்திலிருக்கிறேன். ரமேஷ், விக்னேஷ் உட்பட இப்படத்தில் நடித்த சிறுவர்களின் படிப்புச் செலவு முழுமைவதையும் நான் ஏற்றிருக்கிறேன். அவர்கள் எதுவரை படிக்க ஆசைப்படுகிறார்களோ அதுவரை நான் படிக்க வைப்பேன்!‘‘ என அறிவித்ததும் பத்திரிகையாளர்கள் அனைவரும் கைதட்டிப் பாராட்டினர்.

முன்னதாக, ‘காக்கா முட்டை’ படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்ட சமயத்தில் ரமேஷ், விக்னேஷ், இயக்குனர் மணிகண்டன் ஆகிய மூவருக்கும் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தங்கச்சங்கிலி ஒன்றை பரிசளித்து கௌரவப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;