விஷாலை இயக்கும் பாண்டிராஜ்!

விஷாலை இயக்கும் பாண்டிராஜ்!

செய்திகள் 5-May-2015 11:22 AM IST Chandru கருத்துக்கள்

‘ஆம்பள’ படத்தைத் தொடர்ந்து தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ‘பாயும் புலி’ படத்தில் நடித்து வருகிறார் விஷால். காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு 50% சதவிகிதத்திற்கும் மேல் முடிவடைந்துவிட்டது. இப்படத்தின் வேலைகள் முடிந்ததும் லிங்குசாமி இயக்கத்தில் ‘சண்டக்கோழி’ படத்தின் 2ஆம் பாகத்தில் நடிக்கவிருக்கும் விஷால், அதனைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கிறார்.

தற்போது சூர்யாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரிக்கும் ‘ஹைக்கூ’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் பாண்டிராஜ். அதோடு சிம்பு, நயன்தாரா நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் வேலைகளும் இன்னொருபுறம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இந்த 2 படங்களும் முடிந்ததும் விஷால் படத்திற்கான வேலைகளில் களமிறங்கவிருக்கிறார் பாண்டிராஜ். விஷாலின் ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாவீரன் கிட்டு - கண்ணடிக்கல பாடல் வீடியோ


;