பரத்துக்கு ஜோடியாகும் சஞ்சிதா ஷெட்டி!

பரத்துக்கு ஜோடியாகும் சஞ்சிதா ஷெட்டி!

செய்திகள் 5-May-2015 10:58 AM IST VRC கருத்துக்கள்

‘சூதுகவ்வும்’, ’பீட்சா-2 வில்லா’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் சஞ்சிதா ஷெட்டி. இவர் தற்போது நடித்து வரும் படம் ‘என்னோடு விளையாடு’. அறிமுக இயக்குனர் அருண்குமார் சாமி இயக்கும் இப்படத்தில் பரத் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் சஞ்சிதா ஷெட்டி! ஒரு சில நாட்களுக்கு முன் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்று சென்னையில் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்துள்ளார் சஞ்சிதா ஷெட்டி! இப்படம் தவிர ‘பேட்மேஷ்’ என்ற கன்னட படத்திலும் நடித்து வருகிறார் சஞ்சிதா ஷெட்டி. இப்படத்தில் தனஞ்சய் கதாநாயகனாக நடிக்கிறார். கன்னட சினிமாவில் அறிமுகமான சஞ்சிதா ஷெட்டி ஐந்து வருடங்களுக்கு பிறகு நடிக்கும் கன்னட படமாம் இது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரம் - டீசர்


;