மீண்டும் இணைந்த சித்தார்த் - த்ரிஷா!

மீண்டும் இணைந்த சித்தார்த் - த்ரிஷா!

செய்திகள் 5-May-2015 10:24 AM IST Chandru கருத்துக்கள்

வினய், ஆன்ட்ரியா, ஹன்சிகா, ராய் லக்ஷ்மி, சந்தானம் ஆகியோர் நடிப்பில் சுந்தர்.சி இயக்கிய ‘அரண்மனை’ படம் கடந்த வருடம் வெளிவந்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2ஆம் பாகத்தையும் எடுக்கவிருக்கிறார்கள் என அப்போதே செய்திகள் வெளிவந்தன. ஆனால், அதற்கான வேலைகள் இப்போதுதான் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. ஆம்... சுந்தர்.சி தற்போது ‘அரண்மனை 2’விற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளில் பிஸியாக இருக்கிறார்.

இந்நிலையில், நேற்று த்ரிஷா தனது பிறந்தநாளை முன்னிட்டு ‘அரண்மனை 2’ படத்தில் தான் நாயகியாக நடிக்கவிருக்கும் செய்தியை ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார். இப்படத்தில் நாயகனாக சித்தார்த் நடிக்கிறாராம். வழக்கம்போல் சந்தானம், மனோபாலா உள்ளிட்ட சுந்தர்.சியின் ஆஸ்தான காமெடிக் கூட்டணி இப்படத்திலும் தொடரும் என்கிறார்கள்.

தெலுங்கில் வெளிவந்த ‘நுவ்வோஸ்டனன்டே நேனோட்டன்டனா’, மணிரத்னத்தின் ‘ஆயுத எழுத்து’ படத்தைத் தொடர்ந்து சித்தார்த் & த்ரிஷா ‘அரண்மனை 2’வில் 3வது முறையாக ஜோடி சேருகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - காரிகள் கண்ணே பாடல் வீடியோ


;