இன்று பிறந்த நாள் காணும் பிரபலங்கள்!

இன்று பிறந்த நாள் காணும் பிரபலங்கள்!

செய்திகள் 5-May-2015 10:14 AM IST VRC கருத்துக்கள்

தென்னிந்திய சினிமாவின் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ராய் லட்சுமியும் ஒருவர். தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று தனது எல்லையை விரிவுபடுத்திக் கொண்டு நடித்து வரும் ராய் லட்சுமி பிறந்த நாள் இன்று! இவரை போலவே தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக விளங்கி வரும் இன்னொரு நடிகை விசாக சிங்! ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே இவர் நடித்துள்ளார் என்றாலும் இவரது நடிப்பை எடுத்துக் கூற ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்ற ஒரு படம் போதும்! இன்று பிறந்த நாள் காணும் இந்த இரண்டு நடிகைகளுடன் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ எனும் படத்தின் மூலம் மாபெரும் புகழ்பெற்ற இயக்குனர் பொன்ராம் பிறந்த நாளும் இன்று தான்! இன்று (மே-5) பிறந்த நாள் காணும் இந்த மூன்று பிரபலங்களுக்கும் ‘டாப் 10 சினிமா’வின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பெங்களூர் நாட்கள் - பரபரப்பா ஒரு ஊரு பாடல் வீடியோ


;