திருவொற்றியூரில் தொடங்குகிறது ‘காஷ்மோரா’

திருவொற்றியூரில் தொடங்குகிறது ‘காஷ்மோரா’

செய்திகள் 5-May-2015 10:04 AM IST Chandru கருத்துக்கள்

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தைத் தொடர்ந்து இயக்குனர் கோகுல் அடுத்து இயக்கும் படம் ‘காஷ்மோரா’. கொம்பனுக்குப் பிறகு இப்படத்திலும் நாயகனாக கார்த்தி நடிக்க, அவருக்கு ஜோடியாக நயன்தாராவும், ஸ்ரீதிவ்யாவும் நடிக்கிறார்கள். இப்படத்தின் மூலம் கார்த்தியுடன் முதல்முறையாக இணைகிறார் காமெடியன் விவேக். ஒளிப்பதிவை ஓம்பிரகாஷும், இசையை சித்தார்த் விபினும் கவனிக்கிறார்கள்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை கடந்த 1ஆம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று முதல் ‘காஷ்மோரா’வின் படப்பிடிப்பு சென்னை திருவொற்றியூரிலிருந்து தொடங்குகிறது. கார்த்தி, ஸ்ரீதிவ்யா, விவேக் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவிருக்கும் இப்படப்பிடிப்பிற்காக பிரம்மாண்டமான செட் ஒன்றும் போடப்பட்டுள்ளதாம். விரைவில் நயன்தாராவுக்கான படப்பிடிப்பும் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டத்தில் ஒருத்தன் - டிரைலர்


;