ஜோதிகாவின் ‘36 வயதினிலே’ ரிலீஸ் தேதி ரெடி!

ஜோதிகாவின் ‘36 வயதினிலே’ ரிலீஸ் தேதி ரெடி!

செய்திகள் 4-May-2015 12:43 PM IST VRC கருத்துக்கள்

கிட்டத்தட்ட 8 வருடங்களுக்குப் பிறகு நடிகை ஜோதிகா நடித்திருக்கும் படம் ‘36 வயதினிலே’. மலையாளத்தில் வெளிவந்து ஹிட்டான ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ படத்தையே தமிழில் ஜோதிகா நடிக்க, ‘36 வயதினிலே’ படமாக இயக்கியிருக்கிறார் ரோஷன் ஆன்ட்ரூஸ். சூர்யாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகியுள்ள இப்படத்தில் ஜோதிகாவுடன் ரஹ்மான், அபிராமி முதலானோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இப்படம் எப்போது ரிலீசாகும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர் ரசிகர்கள்! ரசிகர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ஜோதிகாவின் ‘36 வயதினிலே’ வருகிற 15-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது. கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் மூலம் ஜோதிகா சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்குகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மகளிர் மட்டும் - டிரைலர்


;