‘மெட்ராஸ்’ பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி!

‘மெட்ராஸ்’ பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி!

செய்திகள் 4-May-2015 11:44 AM IST VRC கருத்துக்கள்

‘லிங்கா’வை தொடர்ந்து ரஜினிகாந்த் ஷங்கர் இயக்கத்தில் ‘எந்திரன் 2’ படத்தில் நடிக்க இருக்கிறார் என்றும், இல்லை, சுந்தர்.சி.தான் ரஜினியின் அடுத்த படத்தை இயக்குகிறார் என்றும் முதலில் சொல்லப்பட்டது. அத்துடன் அடுத்து ரஜினியை இயக்கப் போகிறவர் ராகவா லாரன்ஸ் என்றும் பேசப்பட்டது. ஆனால் இப்போது திடீர் திருப்பமாக ரஜினியின் அடுத்த படத்தை ‘மெட்ராஸ்’ படத்தை இயக்கிய பா.ரஞ்சித் தான் இயக்க போகிறார் என்றும், அந்த படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரபூர்வமான எந்த தகவலும் வெளியாகாத நிலையில் ‘அட்டகத்தி’ தினேஷ், இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ரஜினியை இயக்கப் போவது குறித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். நமக்கு கிடைத்த தகவலின் படியும் ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை இயக்குவது பா.ரஞ்சித் தான் என்பது உறுதியாகியுள்ளது. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பது யார், இசை அமைப்பாளர் யார் என்பது போன்ற விவரங்கள் இன்னும் முடிவாகவில்லை. அது சம்பந்தமான விவரங்கள் விரைவில் தெரிய வரும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காற்று வெளியிடை - படத்தின் சிறு முன்னோட்ட காட்சிகள்


;