15 வருடங்கள், 50 படங்கள் - த்ரிஷா சாதனை!

15 வருடங்கள், 50 படங்கள் - த்ரிஷா சாதனை!

செய்திகள் 4-May-2015 10:51 AM IST VRC கருத்துக்கள்

சினிமாவில் அறிமுகமாகி 15 வருடங்கள், கிட்டத்தட்ட 50 படங்கள்… இது நடிகை த்ரிஷாவின் சாதனை! தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் குறிப்பிட்ட ஒரு சில நடிகைகளே பல ஆண்டு காலம் தொடர்ந்து நிலைத்து நின்றிருக்கின்றனர்! அந்த பட்டியலில் த்ரிஷாவுக்கு தனி ஒரு இடம் உண்டு! தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உட்பட பல மொழிகளில் நடித்துள்ள த்ரிஷா இன்னமும் சினிமாவில் மோஸ்ட் வான்டட் ஹீரோயினாக தான் இருந்து வருகிறார். தற்போது ‘பூலோகம்’, ‘அப்பா டக்கர்’, செல்வராகவன் இயக்கும் படம், மற்றும் ஒரு சில தெலுங்கு படங்கள் என பிசியாக நடித்து வரும் த்ரிஷாவுக்கு இன்று பிறந்த நாள்! தென்னிந்திய சினிமாவில் எவர்கிரீன் ஹீரோயினாக திகழ்ந்து வரும் த்ரிஷாவுக்கு ‘டாப் 10 சினிமா’வின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் வேர்ல்ட் பாடல் வரிகள் வீடியோ - சதுரங்க வேட்டை 2


;