மே 8-ல் யுவனின் மியூசிக் ட்ரீட்!

மே 8-ல் யுவனின் மியூசிக் ட்ரீட்!

செய்திகள் 4-May-2015 10:16 AM IST VRC கருத்துக்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘மாஸ்’ படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் ரிலீசாகவிருக்கும் இப்படத்தின் ஆடியோ வருகிற 8-ஆம் தேதி வெளியாகவுள்ளது. வெங்கட் பிரபு இயக்கிய ‘பிரியாணி’ படத்தை தொடர்ந்து இப்படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா தான் இசை அமைத்துள்ளார். ‘மாஸ்’ படத்தில் சூர்யாவுடன் நயன்தாரா, ப்ரணிதா, பிரேம்ஜி அமரன், சமுத்திரக்கனி முதலானோர் நடித்திருக்க, இப்படத்தை ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாரித்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள முதல் படம் இது! இதற்கு முன் வெங்கட் பிரபு, யுவன் கூட்டணி அமைத்துள்ள அனைத்து படங்களின் பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளன. அந்த வகையில் ‘மாஸ்’ படப் பாடல்களும் ரசிகர்களுக்கு நல்ல ஒரு மியூசிக் ட்ரீட்டாக அமையப் போகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;