சர்ப்ரைஸாகத் துவங்கியது கார்த்தியின் ‘காஷ்மோரா’!

சர்ப்ரைஸாகத் துவங்கியது கார்த்தியின் ‘காஷ்மோரா’!

செய்திகள் 2-May-2015 12:10 PM IST Chandru கருத்துக்கள்

பிரியாணி, மெட்ராஸ், கொம்பன் என வரிசையாக வெற்றிப் படங்களை கொடுத்து வரும் கார்த்தியின் அடுத்த படம் ‘காஷ்மோரா’. ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ கோகுல் இயக்கும் இப்படத்தில், கார்த்திக்கு ஜோடியாக நயன்தாரா, ஸ்ரீதிவ்யா என இரண்டு நாயகிகள் நடிக்கிறார்கள். காமெடியனாக விவேக் முதல்முறையாக கார்த்தியுடன் இணைகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவையும், சித்தார்த் விபின் இசையமைப்பையும் கவனிக்கிறார்கள்.

வித்தியாசமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் பூஜை நேற்று (மே 1) இனிதே நடந்து முடிந்துள்ளது. இந்த பூஜையில் நடிகர் கார்த்தி, தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, இயக்குனர் கோகுல், இசையமைப்பாளர் சித்தார்த் விபின் உள்ளிட்ட படக்குழுவினருடன் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, விஜய்சேதுபதி உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள். ஒரு சில தினங்களில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;