த்ரிஷா பற்றி மனம் திறந்த ஓவியா!

த்ரிஷா பற்றி மனம் திறந்த ஓவியா!

செய்திகள் 2-May-2015 11:56 AM IST Chandru கருத்துக்கள்

‘என்னை அறிந்தால்’ படத்தைத் தொடர்ந்து தற்போது ‘போகி’ எனும் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் த்ரிஷா. தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் உருவாகி வரும் இப்படத்தில் த்ரிஷாவுடன் ஓவியா, பூனம் பாஜ்வாவும் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். காமெடி த்ரில்லராக உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பில் த்ரிஷாவுடன் இணைந்து நடித்தது குறித்து ஓவியா சமீபத்தில் மனம் திறந்துள்ளார். அதில்...

‘‘த்ரிஷா போன்ற ஒரு பெரிய நடிகை இவ்வளவு எளிமையாகப் பழகுவார் என நான் எதிர்பார்க்கவே இல்லை. செட்டில் அனைவருடனும் சகஜமாகப் பழகுகிறார். அதோடு குறித்த நேரத்திற்கு சரியாக படப்பிடிப்பில் ஆஜராகிவிடுகிறார். அவரிடமிருந்து நான் நிறைய விஷயங்களை கற்று வருகிறேன். என்னுடன் பல விஷயங்களையும் பகிர்ந்துள்ளார். ஒருசில அறிவுரைகளும் அவர் எனக்கு வழங்கியுள்ளார்!’’ என குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;