தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனின் ஜோடியாக சமந்தா!

தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனின் ஜோடியாக சமந்தா!

செய்திகள் 2-May-2015 11:28 AM IST Chandru கருத்துக்கள்

தன் மிமிக்ரி திறமை மூலம் மேடைக்கலைஞராக தன் வாழ்க்கையைத் துவங்கிய சிவகார்த்திகேயன், விஜய் டிவி மூலம் புகழ்பெற்று சினிமாவிலும் நுழைந்தார். தனது அடுத்தடுத்த வெற்றிகள் மூலம் மளமளவென முன்னுக்கு வந்த சிவா, இப்போது முன்னணி நட்சத்திரப்பட்டியலை நோக்கி வேகமாக வளர்ந்து வருகிறார். ஒரு புறம் ஹீரோவாக சாதித்து வரும் சிவகார்த்திகேயன் இன்னொருபுறம் படக்கம்பெனி ஆரம்பித்து படங்களை தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளார்.

தனது நணபரும் மேனேஜருமான ஆர்.டி.ராஜாவுடன் இணைந்து புதிய படக்கம்பெனி துவங்கி, அதில் தானே ஹீரோவாக நடிக்க உள்ளார் சிவகார்த்திகேயன். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை அட்லியிடம் அசோசியேட்டாக வேலை பார்த்த பாக்யராஜ் பாரதி என்பவர் இயக்குகிறார். இப்படத்தின் மூலம் விஜய், சூர்யா, விக்ரமைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகிறார் நடிகை சமந்தா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - எழு வேலைக்காரா பாடல் வீடியோ


;