‘அஜித் 56’ பற்றி அனிருத்தின் புதிய அறிவிப்பு!

‘அஜித் 56’ பற்றி அனிருத்தின் புதிய அறிவிப்பு!

செய்திகள் 2-May-2015 10:56 AM IST Chandru கருத்துக்கள்

நேற்று (மே 1) அஜித் பிறந்தநாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலம் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். ரசிகர்களும் தங்கள் பங்கிற்கு தங்களின் புரொபைல், கவர் படங்களில் அஜித்தின் பிறந்தநாள் வாழ்த்தோடு கூடிய படங்களை வைத்து சந்தோஷமாக பகிர்ந்து வந்தனர். தொலைக்காட்சிகள், வானொலிகள் ஆகியவற்றிலும் ‘தல பர்த்டே’ ஸ்பெஷல் நிகழ்ச்சிகளும் ஒளி/ஒலி பரப்பப்பட்டன.

பிரபலங்கள் வரிசையில் இசையமைப்பாளர் அனிருத்தும் அஜித்திற்கு ட்விட்டர் மூலம் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். அதோடு, ‘வீரம்’ சிவா இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்கும் படம் குறித்த தகவலையும் பகிர்ந்து தல ரசிகர்களை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்தார். ‘‘அஜித் 56 படத்திற்கான தீம் மியூசிக்கும், அறிமுகப்பாடலும் தயாராகிவிட்டது. ஹேப்பி பர்த்டே தல அஜித்!’’ என ட்வீட் செய்திருக்கிறார் அனிருத். பில்லா, மங்காத்தா, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால் வரிசையில் இப்படத்தின் தீம் மியூசிக்கும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறுமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோலமாவு கோகிலா ட்ரைலர்


;