‘மெட்ராஸ்’ படத்திற்கு நாகி ரெட்டி விருது!

‘மெட்ராஸ்’ படத்திற்கு நாகி ரெட்டி விருது!

செய்திகள் 2-May-2015 10:52 AM IST VRC கருத்துக்கள்

தென்னிந்திய திரைப்பட உலகில் ஜாம்பவானாக விளங்கியவர் பி.நாகி ரெடி.அவரது நினைவாக கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் சிறந்த குடும்ப, பொழுதுபோக்கு திரைப்படத்திற்கு விருது வழங்கி வருகிறது. அவ்வகையில் கடந்த ஆண்டுக்கான (2014) சிறந்த படமாக ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் தயாரிப்பில், கார்த்தி நடித்து, பா.ரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ படம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான விழா நேற்று (மே-1) மாலை சென்னையிலுள்ள காமராஜர் அரங்கில் நடந்தது. இவ்விழாவில் ‘மெட்ராஸ்’ படத்திற்கான நாகி ரெட்டி நினைவு விருதை ‘மெட்ராஸ்’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பிரபு பெற்றுக் கொண்டார். இவ்விழாவிற்கு முன்னாள் ஜார்கண்ட் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி எம்.கற்பக விநாயகம் முன்னிலை வகித்து வாழ்த்திப் பேசினார். விழாவில் வசனகர்த்தா ஆரூர்தாஸ், இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், சரோஜா தேவி, ஷோபா சந்திரசேகரன், ‘மெட்ராஸ்’ படத்தில் நடித்த கலையரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொடக்கு ஆடியோ பாடல்


;