இன்று உறுதியாய் வருகிறார் ‘உத்தம வில்லன்’!

இன்று உறுதியாய் வருகிறார் ‘உத்தம வில்லன்’!

செய்திகள் 2-May-2015 10:07 AM IST Chandru கருத்துக்கள்

பெரும் எதிர்பார்ப்போடு நேற்று வெளியாகவிருந்த ‘உத்தம வில்லன்’ படம் சிற்சில காரணங்களால் ரிலீஸாகவில்லை. உலகநாயகன் படம் என்பதால் சென்னையில் நேற்று காலை 6 மணியிலிருந்தே சிறப்புக் காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ரசிகர்களும் பெரிய எதிர்பார்ப்புடன் திரையரங்கங்களுக்கு படையெடுத்து வந்தனர். ஆனால், தியேட்டருக்கு சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நேற்று காலை காட்சிகள் ரத்தானதும், மாலைக்காட்சியாவது ரிலீஸாகும் என எதிர்பார்த்தனர். ஆனாலும் நேற்றைய காட்சிகள் முழுவதுமே ரத்து செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து ‘உத்தம வில்லன்’ சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் நேற்றே பேசி முடிக்கப்பட்டு விட்டதாகவும், இதனால் இன்று பிற்பகல் காட்சியிலிருந்து படம் அனைத்து ஊர்களிலும் ரிலீஸாகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சபாஷ் நாயுடு மோஷன் போஸ்டர்


;