அஜித்தின் ஸ்பெஷல் பர்த்டே!

அஜித்தின் ஸ்பெஷல் பர்த்டே!

செய்திகள் 30-Apr-2015 5:55 PM IST VRC கருத்துக்கள்

எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது கடின முயற்சியாலும், உழைப்பாலும் சினிமாவில் படிப்படியாக முன்னேறி இன்று உயர்ந்த ஒரு இடத்தை பிடித்துக்கொண்டுள்ள அஜித், சினிமாவுக்கு வரும் இளைஞர்களுக்கு ஒரு எடுத்துகாட்டாக விளங்கி வருபவர்! எத்தனை உயரத்திற்கு சென்றாலும் எளிமையான ஒரு வாழ்க்கை முறையை கடை பிடித்து வருபவர். தொடர் வெற்றிகள் வந்தால் துள்ளிக் குதிக்காமலும், தோல்விகள் வந்தால் துவண்டு போகாமலும் எல்லாவற்றையும் ஒரே மனநிலையில் எடுத்துகொண்டு சினிமாவில் பயணிப்பவர்!

இந்த வருட துவக்கத்திலேயே ‘என்னை அறிந்தால்’ எனும் வெற்றி படத்தை தந்த கையோடு, அழகான ஆண் குழந்தைக்கும் தந்தையாகி விட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார் அஜித்! நாளை (மே-1) தனது 44ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார் அஜித்! இந்த வருட பிறந்த நாளுக்கு அஜித்துக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய பிறந்த நாள் பரிசு மகன் ஆத்விக்! இந்த சந்தோஷத்துடன் தனது பிறந்த நாளை அஜித் விமரிசையாக கொண்டாடுகிறாரோ இல்லையோ, அவரது ரசிகர்கள் நிச்சயமாக கொண்டாடி தீர்த்து விடுவார்கள்.

‘தல’ அஜித்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;