பாக்யராஜ், பார்த்திபன் வரிசையில் பா.விஜய்!

பாக்யராஜ், பார்த்திபன் வரிசையில் பா.விஜய்!

செய்திகள் 30-Apr-2015 3:39 PM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு இடைத்தை பிடித்துக் கொண்டுள்ள பாடலாசிரியர் பா.விஜய். ‘ஞாபகங்கள்’, ‘இளைஞன்’ ஆகிய படங்கள் மூலம் சினிமாவில் தன்னை ஒரு நடிகராகவும் அடையாளம் காட்டியுள்ளார்! இந்த படங்களை தொடர்ந்து ‘தகடு தகடு’ என்ற படத்திலும் நடித்திருக்கும் பா.விஜய், அடுத்து தயாரிப்பாளர், இயக்குனர் என்ற துறைகளையும் கையில் எடுத்திருக்கிறார். இதற்காக ‘வில் மேக்கர்ஸ்’ என்ற பெயரில் புதிய பட நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாக இருக்கும் படத்தை பா.விஜய்யே இயக்கி, தயாரித்து, அதில் ஹீரோவாகவும் நடிக்க இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் தெரிய வரும். ஏற்கெனவே கமல்ஹாசன், பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன் உட்பட பலர் சொந்தமாக படங்களை இயக்கி, தயாரித்து, ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்கள்! இப்போது அந்த வரிசையில் பா.விஜய்யும் இடம் பிடித்து விட்டார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிரம்மாடாட்காம் - டிரைலர் 2


;