சர்ப்ரைஸாக ரிலீஸாகும் கமலின் ‘பாபநாசம்’ டிரைலர்!

சர்ப்ரைஸாக ரிலீஸாகும் கமலின் ‘பாபநாசம்’ டிரைலர்!

செய்திகள் 30-Apr-2015 1:02 PM IST Chandru கருத்துக்கள்

ஒரே நேரத்தில் 3 படங்களில் நடித்து வந்த கமல் தற்போது 3 படங்களையும் முடித்துவிட்டு ஒவ்வொரு படத்தின் ரிலீஸுக்காக திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். நாளை உலகமெங்கும் ‘உத்தம வில்லன்’ படம் ரிலீஸாகிறது. அதனைத் தொடர்ந்து ஜூன் மாதம் ‘பாபநாசம்’ படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ‘பாபநாசம்’ படத்தின் டைட்டில் டிசைன் இணையதளங்களில் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து திடீர் சர்ப்ரைஸாக இன்று மாலை ‘பாபநாசம்’ படத்தின் டிரைலரை வெளியிடவிருப்பதாக ஆடியோ உரிமையை கைப்பற்றியிருக்கும் ‘திங்க் மியூசிக்’ நிறுவனம் அறிவித்துள்ளது.

மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘திருசியம்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘பாபநாசம்’ படத்தில் கமலுக்கு ஜோடியாக கௌதமி நடித்துள்ளார். இவர்களுடன் கலாபவன் மணி, நிவேதா தாமஸ், சார்லி, டெல்லி கணேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள். மலையாளத்தில் இயக்கிய ஜீத்து ஜோசப்பே தமிழிலும் இயக்குகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சபாஷ் நாயுடு மோஷன் போஸ்டர்


;