சுந்தர்.சி.யின் ‘ஹலோ... நான் பேய் பேசுறேன்!’

சுந்தர்.சி.யின் ‘ஹலோ... நான் பேய் பேசுறேன்!’

செய்திகள் 30-Apr-2015 11:51 AM IST Chandru கருத்துக்கள்

ஏற்கெனவே பேய் பிடித்து அலையும் கோலிவுட்டில் இப்போது ‘காஞ்சனா 2’வின் அதிரி புதிரி வெற்றியால் இன்னும் பல பேய்ப்படங்களுக்கு பூஜை போடப்பட்டுள்ளது. தன் பங்குக்கு ‘அரண்மனை’ மூலம் சுந்தர்.சியும் பேய் பங்களாவிற்குள் அடியெடுத்து வைத்தார். அப்படத்தின் வெற்றி காரணமாக விரைவில் ‘அரண்மனை’ படத்தின் 2ம் பாகமும் உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது ‘அவ்னி சினிமேக்ஸ்’ நிறுவனம் மூலம் புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளாராம் இயக்குனர் சுந்தர்.சி. அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கும் இப்படத்திற்கு ‘ஹலோ... நான் பேய் பேசுறேன்!’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாம். வைபவ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ஓவியா, ஐஸ்வர்யா ராஜேஷ் என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இவர்களுடன் ‘விடிவி’ கணேஷ், கருணாகரன் ஆகியோர் காமெடிக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். கீழே கிடக்கும் செல்போன் ஒன்றை எடுக்கும் ஹீரோவுக்கு அதன் மூலம் பேய் பிடிக்க, அதன் பிறகு நடக்கும் காமெடி கலாட்டாவே இப்படத்தின் கதைக்களமாம். விரைவில் இப்படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கலகலப்பு 2 - டீசர்


;