‘‘விஜய்யுடன் நடிக்கிறேன்’’ - நந்திதா ஸ்வேதா

‘‘விஜய்யுடன் நடிக்கிறேன்’’  - நந்திதா ஸ்வேதா

செய்திகள் 30-Apr-2015 11:28 AM IST VRC கருத்துக்கள்

தற்போது ‘இடம் பொருள் ஏவல்’, ’உப்புக்கருவாடு’ ஆகிய படங்களில் நடித்து வரும் நந்திதாவுக்கு விஜய்யின் ‘புலி’ படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏற்கெனவே ‘புலி’ படத்தில் விஜய்யுடன் ஹன்சிகா மோத்வானி, ஸ்ருதி ஹாசன், ஸ்ரீதேவி உட்பட பலர் நடித்து வருகையில் இப்போது நந்திதாவும் அந்த பட்டியலில் இடம் பெற்று விட்டார்! இதனை தொடர்ந்து விஜய்யுடன் ‘புலி’யில் நடிக்கும் மகிழ்ச்சியான அனுபவம் குறித்து ட்வீட் செய்துள்ள நந்திதா, அனைவருக்கும் ஒரு வேண்டுகோளையும் வைத்துள்ளார். அதாவது இனிமேல் தன்னை பற்றி குறிப்பிடும்போது தனது முழுப் பெயரான நந்திதா ஸ்வேதா என்று குறிப்பிடும் படி கேட்டுக் கொண்டுள்ளார். விஜய்யுடன் ‘புலி’ படத்தில் மகிழ்ச்சியுடன் நடித்து வரும் நந்திதாவுக்கு இன்று மகிழ்ச்சியான நாள்! அதாவது, நந்திதாவுக்கு இன்று பிறந்த நாள்! பிறந்த நாள் காணும் நந்திதாவுக்கு ‘டாப் 10 சினிமா’வின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;