அஜித் பிறந்த நாளில் அருண் விஜய், சிம்பு ஸ்பெஷல்!

அஜித் பிறந்த நாளில் அருண் விஜய், சிம்பு ஸ்பெஷல்!

செய்திகள் 29-Apr-2015 12:44 PM IST VRC கருத்துக்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் ‘என்னை அறிந்தால்’ படத்தில் வில்லனாக நடித்த அருண்விஜய், இப்படத்திற்கு முன் ஹீரோவாக நடித்த படம் ’வா’. அருண்விஜய்யின் மாமனார் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தை அறிமுக இயக்குனர் ரத்தின சிவா இயக்கியுள்ளார். அஜித்துடன் ‘என்னை அறிந்தால்’ படத்தில் வில்லனாக நடிக்க அழைப்பு வந்ததும் அருண்விஜய், ‘வா’ படத்தின் வேலைகளை அப்படியே தள்ளி வைத்து ‘என்னை அறிந்தால்’ படத்தில் ஐக்கியமாகி விட்டார். ‘என்னை அறிந்தால்’ வெளியானதும் அருண் விஜய் எதிர்பார்த்தது மாதிரியே அவர் ஏற்று நடித்திருந்த விக்டர் கேரக்டர் அவருக்கு பெரும் புகழை தேடித் தந்தது. இதனை தொடர்ந்து இப்போது தனது ‘வா’ படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகளில் பிசியாகிவிட்டார் அருண் விஜய்!

‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்ததன் மூலம் மேலும் அஜித்தின் தீவிர ரசிகராகிவிட்ட அருண் விஜய், தனது ‘வா’ படத்தின் டிரைலரை அஜித்தின் பிறந்த நாளான மே-1 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்! அதைப் போலவே அஜித்தின் தீவிர ரசிகரான சிம்புவும் தனது ‘வாலு’ படத்தின் இரண்டாவது டிரைலரை அஜித்தின் பிறந்த நாள் அன்று ரிலீஸ் செய்யவிருக்கிறார். ஆக, தல பிறந்த நாளில் அருண் விஜய் மற்றும் சிம்பு நடித்த படங்களின் டிரைலர்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;