‘பாஹுபலி’ ரிலீஸ் தேதி மாற்றம்!

‘பாஹுபலி’ ரிலீஸ் தேதி மாற்றம்!

செய்திகள் 29-Apr-2015 11:58 AM IST VRC கருத்துக்கள்

ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கு, தமிழில் பிரம்மாண்ட படமாக உருவாகி வரும் ‘பாஹுபலி’ படத்தை மே 15-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால் இப்படத்தின் சி.ஜி. ஒர்க்ஸ் மற்றும் இதர போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் இன்னமும் முடியவில்லையாம். இதனால் இப்படத்தின் ரிலீஸை ஜூலை மாதத்திற்கு தள்ளி வைத்திருக்கிறார்கள். இப்படத்தை மே மாத ரிலீசாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களை ஆறுதல்படுத்தும் விதமாக இப்படத்தின் டிரைலரை மே-31 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருக்கிறார் இயக்குனர் ராஜமௌலி! இதனை அவரே ஒரு வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

‘பாஹுபலி’ படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சுதீப், சத்யராஜ் முதலானோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்க, எம்.எம்.கீரவாணி (மரகதமணி) இசை அமைத்து வருகிறார். இப்படத்தை தமிழகம் முழுக்க ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் விநியோகம் செய்யவிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;