தமிழர்களை சுட்டுக்கொன்ற சம்பவம் படமாகிறது!

தமிழர்களை சுட்டுக்கொன்ற சம்பவம் படமாகிறது!

செய்திகள் 29-Apr-2015 11:27 AM IST VRC கருத்துக்கள்

ஆந்திராவில் செம்மரக்கட்டை வெட்டினார்கள் என்று சொல்லி 20 தமிழர்களை சுட்டுக் கொன்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ‘தூக்குமர பூக்கள்’ என்ற படத்தை ஜெயவிஜய சாமுண்டீஸ்வரி புரொடக்ஷன் – ஸ்காட் மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தின் முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்க உள்ளனர்.

திரைக்கதை, வசனத்தை கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் எழுத, கதை எழுதி இயக்குகிறார்கள் இரட்டையர்களான வி.ஆர்.காளிதாஸ், வி.அகஸ்டின். ‘‘செம்மரக்கட்டை வெட்டினார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் 20 பேரை மானிதாபமின்றி, துன்புறுத்தி, உடல் உறுப்புகளை சிதைத்து கொன்ற கொடூரத்தின் பின்னணி என்ன? என்ற உண்மை சம்பவத்தை வெளிப்படுத்தவே இப்படம்’’ என்றார்கள் இயக்குனர்கள். இப்படத்திற்கு பாபு ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். சுனில் சேவியர் இசை அமைக்கிறார். சம்பவம் நடைபெற்ற பகுதிகளிலேயே இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. இப்படத்தில் நடிப்பவர்களின் விவரங்கள் விரைவில் தெரிய வரும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;