மே 1ல் ஆந்திராவைத் தாக்கும் ‘காஞ்சனா 2’

மே 1ல் ஆந்திராவைத் தாக்கும் ‘காஞ்சனா 2’

செய்திகள் 29-Apr-2015 11:14 AM IST Chandru கருத்துக்கள்

ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஒரு காட்டு காட்டிக் கொண்டிருக்கும் ‘காஞ்சனா 2’ வரும் மே 1ஆம் தேதி ஆந்திராவையும் ஒரு கை பார்க்கவிருக்கிறது. ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருக்கும் இப்படத்தில் டாப்ஸி, நித்யா மேனன், கோவை சரளா, ரேணுகா, ஸ்ரீமன், மனோபாலா உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். கடந்த 17ஆம் தேதி வெளியான இப்படம் முதல் 10 நாட்களிலேயே தமிழகத்தில் மட்டும் 35 கோடிகளை வாரிக்குவித்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ‘காஞ்சனா 2’வின் தெலுங்கு பதிப்பான ‘கங்கா’ இதுவரை இன்னும் ரிலீஸாகாமல் இருந்து வந்தது.

லாரன்ஸ், டாப்ஸி, கோவை சரளா ஆகியோருக்கு தெலுங்கில் பெரிய வரவேற்பிருப்பதோடு, ஏற்கெனவே முனி, காஞ்சனா என இரண்டு படங்களும் அங்கேயும் ஹிட்டாகியிருப்பதால் இந்த 3ஆம் பாகமான ‘கங்கா’விற்கு ஆந்திராவிலும் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. முன்னணி தமிழ் நட்சத்திரங்களின் படங்களுக்கு இணையாக விலை போனதாகச் சொல்லப்படும் ‘கங்கா’ வரும் மே 1ஆம் தேதி தெலுங்கில் ரிலீஸாகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இட்லி - டீசர்


;