‘என்ட் கார்டு’ போட்ட உத்தம வில்லன்!

‘என்ட் கார்டு’ போட்ட உத்தம வில்லன்!

செய்திகள் 29-Apr-2015 10:54 AM IST Chandru கருத்துக்கள்

‘விஸ்வரூபம்’ படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 2 வருடங்கள் கழித்து ரிலீஸாகவிருக்கிறது கமலின் ‘உத்தம வில்லன்’. இதனால் இப்படத்திற்கிருக்கும் எதிர்பார்ப்பு பல்கிப்பெருகி விஸ்ரூபம் எடுத்துள்ளது. வரும் மே 1ஆம் தேதி வெளியாகவிருக்கும் ‘உத்தம வில்லன்’ படத்திற்கான முன்பதிவு இன்று தமிழகத்தின் பெரும்பாலான திரையரங்குகளிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒரு சில திரையரங்குகள் நேற்றே முன்பதிவைத் தொடங்கிவிட்டன. இந்நிலையில் முன்பதிவு தொடங்கப்பட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டதால், முக்கிய திரையரங்குகளின் ஆன்லைன் முன்பதிவில் இப்போதே ‘என்ட் கார்டு’ போட்டுவிட்டார்கள். குறிப்பாக சென்னையில் சங்கம், அபிராமி, தேவி, சத்யம், கமலா, ஏஜிஎஸ், உட்லாண்ட்ஸ் போன்ற திரையரங்குகளில் முதல் 3 நாட்களுக்கான டிக்கெட்டுகள் 95% சதவிகிதம் முடிந்துவிட்டன. ஆங்காங்கே ஒரு சில ஸ்கிரீனின் முன்வரிசையில் மட்டுமே ஒன்றிரண்டு சீட்டுகள் கண்ணுக்குத் தட்டுப்படுகின்றன.

மே 1ஆம் தேதி விடுமுறை என்பதால் பல திரையரங்குகளில் காலை சிறப்புக்காட்சியும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதற்கான முன்பதிவும் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இதனால் உத்தம வில்லனுக்கான திரையரங்குகள் இன்னும் அதிகமாக்கப்படும் என உலகநாயகன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;