3 நாட்கள் ‘விழித்திரு’ந்து நடித்த கிருஷ்ணா!

3 நாட்கள் ‘விழித்திரு’ந்து நடித்த கிருஷ்ணா!

செய்திகள் 29-Apr-2015 10:17 AM IST Chandru கருத்துக்கள்

கழுகு, யாமிருக்க பயமே, வானவராயன் வல்லவராயன் என நடிகர் கிருஷ்ணாவுக்கு தொடர்ந்து சொல்லிக்கொள்ளும்படியான படங்களாக அமைந்ததால் இப்போது கோடம்பாக்கத்தின் பிஸியான நடிகராகிவிட்டார். படப்பிடிப்பின் இறுதிக்கட்டத்திலிருக்கும் ‘விழித்திரு’ படத்துடன் அண்ணன் விஷ்ணுவர்தனின் இயக்கத்தில் ஆர்யாவுடன் இணைந்து ‘யட்சன்’ படத்திலும், அறிமுக இயக்குனர் இளன் இயக்கும் ‘கிரகணம்’ படத்திலும் ஒரே நேரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் கிருஷ்ணா. சமீபத்தில் இப்படங்களுக்கான படப்பிடிப்பு காலை, மாலை, இரவு என மூன்று நேரங்களும் மாறி மாறி நடக்க 3 நாட்கள் தூக்கமில்லாமல் தொடர்ந்து ‘விழித்திரு’ந்து நடித்துக் கொடுத்தாராம் கிருஷ்ணா.

யட்சன், விழித்திரு படங்களின் ஷூட்டிங் பகலில் நடந்தால், முழுக்க முழுக்க இரவு நேரத்திலேயே படமாக்கப்படும் ‘கிரகணம்’ படத்திற்காக இரவு நேரங்களிலேயே நடிக்க வேண்டியிருப்பதால்தான் தூக்கமில்லாமல் நடித்து வருவதாக கிருஷ்ணா கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விழித்திரு - டிரைலர்


;