ரூபா மஞ்சரியை தூங்கவிடாமல் செய்த ‘சிவப்பு’ கேரக்டர்!

ரூபா மஞ்சரியை தூங்கவிடாமல் செய்த ‘சிவப்பு’ கேரக்டர்!

செய்திகள் 28-Apr-2015 11:23 AM IST VRC கருத்துக்கள்

‘கழுகு’ படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கியுள்ள படம் ‘சிவப்பு’. இலங்கையிலிருந்து அகதியாக வந்த ஒரு இளம் பெண்ணுக்கும், இங்குள்ள கட்டிட தொழிலாளி ஒருவருக்கும் இடையில் ஏற்படும் காதலையும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளையும் சொல்லும் இப்படத்தில் அந்த இலங்கைப் பெண்ணாக ரூபா மஞ்சரி நடித்துள்ளார். இந்த கேரக்டரில் நடித்தது குறித்து ரூபா மஞ்சரி கூறும்போது,

‘‘பிறந்த மண்ணையும், சொந்த பந்தங்களையும் இழந்து அகதியாக இந்தியாவுக்கு வரும் இலங்கை பெண்ணாக இப்படத்தில் நடித்திருக்கிறேன். இந்த கேரக்டரில் இயல்பாக இலங்கை தமிழ் பேசி நடிக்க வேண்டும் என்பதற்காக எனக்கு இலங்கை தமிழ் கற்றுத்தர, ஒரு இலங்கை பெண்ணை நியமித்திருந்தார்கள்! அந்த பெண் எனக்கு இலங்கை தமிழ் கற்றுத் தந்தார்! அத்துடன் அவர் இலங்கையில் பட்ட கஷடங்களை குறித்து சொன்னார்! அப்போது ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. அவர் இப்போது இல்லை என்றும் கேள்விப்பட்டேன்!
‘சிவப்பு’ படத்தில் இலங்கை பெண்ணாக நடித்த அந்த ஒவ்வொரு நாளும் படுத்தால் எனக்கு தூக்கமே வராது! எப்போதுமே இலங்கை அகதிகளின் அந்த துயர வாழ்க்கை தான் மனதில் ஓடும்! இன்னமும் எத்தனையோ பேர் அதுபோன்ற துயர வாழ்க்கை வாழ்ந்து வருவதாக சொல்கிறார்கள்! கஷ்டமாக இருக்கிறது. இலங்கை தமிழர்களின் துயரமான வாழ்க்கைப் பதிவு என்று சொல்லி இதுவரை நிறைய படங்கள் வந்திருக்கிறது. ஆனால் அப்படங்களில் இல்லாத பல மனிதாபிமான விஷயங்கள் இப்படத்தில் இருக்கும். ‘சிவப்பு’ இலங்கை அகதிகளின் துயர வாழ்க்கையை உண்மையாக சித்தரித்துள்ள படம்’’ என்றார்!

இந்த படத்தை முக்தா ஆர்.கோவிந்தின் ‘முக்தா என்டர்டெயின்மென்ட்’ நிறுவனமும், ‘புன்னகைப்பூ’ கீதாவின் ‘எஸ்.ஜி.ஃபிலிம்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பவர் பாண்டி - சூரக்காத்து பாடல் வீடியோ


;