‘புலிமுருகனி’ல் இணையும் மோகன்லால், பிரபு, பீட்டர் ஹெய்ன்!

‘புலிமுருகனி’ல் இணையும் மோகன்லால், பிரபு, பீட்டர் ஹெய்ன்!

செய்திகள் 28-Apr-2015 11:23 AM IST VRC கருத்துக்கள்

‘புலிமுருகனி’ல் இணையும் மோகன்லால், பிரபு, பீட்டர் ஹெய்ன்!
மலையாள சினிமாவை பொருத்தவரையில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் மம்முட்டி நடித்த ‘பழசிராஜா’ என்று கூறப்படுகிறது. இப்படத்தின் தயாரிப்பு செலவு 25 கோடி ரூபாயாம்! ஆனால் இப்போது அதைவிட பெரிய பட்ஜெட்டில் மலையாளத்தில் ஒரு படம் தயாராகவிருக்கிறது. அந்த படத்தின் பெயர் ’புலிமுருகன்’. ‘போக்கிரி ராஜா’, ‘கசின்ஸ்’ உட்பட பல வெற்றி படங்களை இயக்கிய வைசாக் அடுத்து இயக்கும் படம் தான் ‘புலிமுருகன்’. இப்படத்தில் மோகன்லால் ஹீரோவாக நடிக்க, தமிழ் நடிகர் பிரபு உட்பட கிட்டத்தட்ட 60 தென்னிந்திய நடிகர்கள் - நடிகைகள் இப்படத்தில் நடிக்க உள்ளனர். மோகன்லால் இதுவரை ஏற்று நடித்திராத வித்தியாசமான் ஒரு ஆக்‌ஷன் கேரக்டரில் இப்படத்தில் நடிக்க உள்ளார் என்று இப்படத்தின் இயக்குனர் கூறியுள்ளார்

அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் உள்ள கதையாம் இது! அதனால் இப்படத்திற்கான சண்டை காட்சிகளை அமைக்கும் பொறுப்பினை பிரபல ஸ்டன்ட் இயக்குனரான பீட்டர் ஹெய்னிடம் ஒப்படைத்துள்ளார் இயக்குனர் வைசாக்! தமிழில் ஷங்கர் இயக்கிய ‘அந்நியன்’, ‘சிவாஜி’, ‘எந்திரன்’ உட்பட பல படங்களில் ஸ்டன்ட் இயக்குனராக பணியாற்றிய பீட்டர் ஹெய்ன் தற்போது தெலுங்கில் பிரம்மாண்ட படமாக உருவாகி வரும் ‘பாஹுபலி’ படத்தில் ஸ்டன்ட் இயக்குனராக பணியாற்றி வருகிறார். ‘புலிமுருகன்’ படத்தின் முழு கதையையும், அதில் மோகன்லாலின் கேரக்டர் குறித்தும் கேட்டறிந்த பீட்டர் ஹெய்ன், ‘இது தனக்கு சவாலான ஒரு படம்’ என்று கூறி இப்படத்தில் பணியாற்ற மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டுள்ளாராம்! இப்போது இப்படத்திற்கான சண்டை காட்சிகளுக்கு வடிவம் கொடுக்கும் வேலைகளில் பிசியாக இருக்கும் பீட்டர் ஹெய்ன், மோகன்லாலுக்கும் பிரத்தியேக பயிற்சி அளித்து வருகிறாராம்! இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு வியட்நாமில் நடைபெறவிருக்கிறது என்றும், படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்கும் என்றும் அறிவித்திருக்கிறார் இயக்குனர் வைசாக்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - டிரைலர்


;