’உத்தமவில்ல’னுக்கு ரூட் க்ளியர்!

’உத்தமவில்ல’னுக்கு ரூட் க்ளியர்!

செய்திகள் 28-Apr-2015 11:23 AM IST VRC கருத்துக்கள்

கமல்ஹாசன் நடித்துள்ள ‘உத்தம வில்லன்’ படத்தில் இந்து மத மக்களின் மனது புண்படும் படியான காட்சிகள் இருக்கிறது என்றும், அதனால் ‘உத்தம வில்லன்’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு விஷ்வ இந்து பரிஷத் தமிழ்நாடு பிரிவின் ஒருங்கிணைப்பு செயலாளர் எஸ்.ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி டி.ராஜா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பிறகு பிறப்பித்த உத்தரவில், ‘கடவுள் விஷ்ணுவின் அவதாரத்தை அவமானப்படுத்துகின்றனர்’ என்று மனுதாரர் கூறுவதுபோல் இப்படத்தில் தவறு எதும் இருப்பதாக இந்த நீதிமன்றம் கருதவில்லை. இந்த வழக்கில் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு தகுதி எதுவும் இல்லை. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்’’ என்று கூறியுள்ளார். இதனால் ‘உத்தமவில்லன்’ படம் குறித்த தேதியில் எந்த பிரச்சனையும் இல்லாமல் வெளியாகும் என்பது உறுதியாகிவிட்டது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தரமணி டீசர் 2


;