‘உத்தம வில்லனை’ ரிலீஸ் செய்யும் ஸ்டுடியோ கிரீன்!

‘உத்தம வில்லனை’ ரிலீஸ் செய்யும் ஸ்டுடியோ கிரீன்!

செய்திகள் 28-Apr-2015 10:39 AM IST VRC கருத்துக்கள்

பல வெற்றிப் படங்களை தயாரித்து வழங்கியுள்ள ‘ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்’ வேறு நிறுவனங்கள் தயாரித்த படங்களையும் வாங்கி வெளியிட்டு வருகிறது. தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மணிரத்னத்தின் ‘ஓ காதல் கண்மணி’ படத்தை தொடர்ந்து இந்நிறுவனம் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘வை ராஜா வை’ படத்தையும் மே1-ஆம் தேதி தமிழகம் முழுக்க வெளியிடவிருக்கிறது! இந்நிலையில் கமல்ஹாசன் நடிப்பில், லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள ‘உத்தம வில்லன்’ படத்தின் தமிழக உரிமையையும் ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் கைபற்றியுள்ளது. கமல்ஹாசனின் ‘உத்தம வில்லன்’ படத்தை உலகம் முழுக்க உள்ள ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அதைப்போலவே ‘ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மென்ட்’ நிறுவன தயாரிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் தனது இரண்டாவது படமாக இயக்கியுள்ள ‘வை ராஜா வை’ படத்தின் மீதும் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த இரண்டு படங்களையும் ஒரே நாளில் ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் தமிழகம் முழுக்க வெளியிடவிருப்பது கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;