கமல், ஷங்கர், விஜய்யை தொடர்ந்து விவேக்!

கமல், ஷங்கர், விஜய்யை தொடர்ந்து விவேக்!

செய்திகள் 27-Apr-2015 1:08 PM IST VRC கருத்துக்கள்

சென்னையிலுள்ள சத்யபாமா பல்கலைக்கழகம் ஆண்டு தோறும் சமூகத்திற்கு நற்பணிகளை செய்து வருபவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்து வருகிறது. எற்கெனவே சினிமாவை சேர்ந்த நடிகர்கள் கமல்ஹாசன், விஜய், இயக்குனர் ஷங்கர் ஆகியோருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்த சத்யபாமா பல்கலைக்கழகம் இம்முறை நகைச்சுவை நடிகர் விவேகிற்கு டாக்டர் பட்டம் வழங்க இருக்கிறது. விவேக் தான் நடிக்கும் திரைப்படங்கள் மூலம் சமூகத்திற்கு தேவையான நல்ல கருத்துக்களை வலியுறுத்தி வருவதோடு, பசுமை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மரங்களை நட்டும் செயல்பட்டு வருகிறார். இவரது இந்த சேவையை பாராட்டிதான் சத்யபாமா பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்க தீர்மானித்துள்ளது. டாக்டர் பட்டம் பெறவிருக்கும் விவேகிற்கு ‘டாப் 10 சினிமா’வின் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விவேகம் - Never Give Up பாடல் வீடியோ


;