ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த்?

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த்?

செய்திகள் 27-Apr-2015 1:08 PM IST VRC கருத்துக்கள்

‘காஞ்சனா-2’வின் அதிரிபுதிரி வெற்றியை தொடர்ந்து பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் ராகவா லாரன்ஸ்! இப்படத்திற்கு விஜய், இயக்குனர் ஷங்கர் உட்பட பல ‘விஐபி’கள் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில், ராகவா லாரன்ஸ் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும் சந்தித்து அவரது வாழ்த்துக்களை பெற்றுள்ளார். அப்போது இருவரும் தங்களது அடுத்த படம் குறித்துப் பேசியிருக்கிறார்கள்! ‘லிங்கா’ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்தை வைத்து ‘எந்திரன்-2’ படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் ஷங்கர் என்றும் இப்போது அதற்கான வேலைகளில் ஷங்கர் பிசியாக இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இப்படத்தில் நடிப்பது குறித்து ரஜினி இன்னும் முடிவு செய்யவிலையாம்.

இந்நிலையில் ராகவா லாரன்ஸ் - ரஜினி சந்திப்பில் இருவரும் சேர்ந்து படம் பண்ணுவது குறித்து பேச்சு நடந்திருக்கிறது. ராகவா லாரன்ஸுக்கும் மிகவும் பிடித்தவர் ரஜினிகாந்த்! அதுமாதிரி ரஜினிக்கு பிடித்தவர்களில் ராகவா லாரன்ஸும் ஒருவர்! ரஜினியிடம் அவரை வைத்து படத்தை இயக்குவது குறித்து ராகவா லாரன்ஸ் தனது விருப்பம் தெரிவிக்க, அதற்கு ரஜினியும் ஓகே சொல்லியுள்ளாராம்! அப்படி இருவரும் சேர்ந்து படம் பண்ணுவதாக இருந்தால் அதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. காரணம், ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா-2’ படத்தின் தயாரிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பங்கு வகித்துள்ளது. இதனால் விரைவில் பிரம்மாண்டமான ஒரு படத்தில் ரஜினிகாந்தும், ராகவா லாரன்ஸும், சன் பிக்சர்ஸும் இணையவிருக்கிறது என்கிறாகள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - என்ன நான் செய்வேன் பாடல் வீடியோ


;