இலங்கை அகதிகளுக்கு உதவும் ராஜ்கிரண்!

இலங்கை அகதிகளுக்கு உதவும் ராஜ்கிரண்!

செய்திகள் 27-Apr-2015 11:36 AM IST VRC கருத்துக்கள்

‘கழுகு’ படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கியுள்ள படம் ‘சிவப்பு’. இந்தப் படத்தில் நவீன்சந்திரா ஹீரோவாக நடிக்க, கதாநாயகியாக ரூபா மஞ்சரி நடித்துள்ளார். இவர்களுடன் ராஜ்கிரண் கோணார் எனும் அழுத்தமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் தம்பி ராமையா, செல்வா, போஸ் வெங்கட், ஏ.வெங்கடேஷ், சோனா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
‘சிவப்பு’ படம் குறித்து இயக்குனர் சத்யசிவாவிடம் கேட்டபோது, ‘‘இது இலங்கை தமிழர் பற்றிய படம். ஆனால் இலங்கையில் எந்தவித படப்பிடிப்பும் நடத்தப்படவில்லை. முழு படப்பிடிப்பையும் இங்கேதான் நடத்தினோம். இலங்கையிலிருது அகதிகளாக இங்கே வந்து முகாம்களில் தங்கி குடியுரிமைக்காக ஏங்குகிறவர்களின் வாழ்க்கை பதிவு தான் ‘சிவப்பு’. இங்கிருந்து ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு தப்பிப் போக நினைத்து முடியாதவர்களின் மன வலி, காதலையும் உள்ளடக்கிய கதை. பாதுகாப்பு தரவேண்டிய சமூகம் அவர்களை பந்தாட நினைக்க, பாதுகாப்பு அரணாக ‘கோணார்’ என்கிற கேரக்டரில் ராஜ்கிரண் வருகிறார். இதில் அழகிய காதலும் இருக்கிறது, அடித்தட்டு மக்களின் வலியும் இருக்கிறது’’ என்றார் இயக்குனர் சத்யசிவா. இப்படத்திற்கு மது அம்பாட் ஒளிப்பதிவு செய்திருக்க, என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ளார்.

இந்தப் படத்தை முக்தா ஆர்.கோவிந்தின் ‘முக்தா என்டர்டெயின்மென்ட்’ நிறுவனமும், ‘புன்னகைப்பூ’ கீதாவின் ‘எஸ்.ஜி.ஃபிலிம்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தின் விநியோக உரிமையை தேசிகனின் ‘எஸ்.எஸ்.மீடியா’ நிறுவனம் வாங்கியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பவர் பாண்டி - சூரக்காத்து பாடல் வீடியோ


;