மே 22-ல் அருள்நிதி படம்!

மே 22-ல் அருள்நிதி படம்!

செய்திகள் 27-Apr-2015 11:07 AM IST VRC கருத்துக்கள்

அருள்நிதி, ரம்யா நம்பீசன் ஜோடியாக நடித்திருக்கும் படம் ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’. இப்படத்தை ஸ்ரீகிருஷ்ணா இயக்கியுள்ளார். இந்த படம் குறித்து இயக்குனர் ஸ்ரீகிருஷ்ணா கூறும்போது, ‘‘இது சாதாரண ஒரு போலீஸ் கதையல்ல, பராக்கிரமம் மிக்க போலீஸ் பற்றிய கதையும் இல்லை. சோம்பேறிதனத்தை தவிர வேறேதும் அறியாத நான்கு போலீஸ்காரர்களின் கதை. அரசும், மக்களும் இவர்களை என்ன செய்தனர், இவர்களின் எண்ணத்தில் இவர்கள் வென்றார்களா என்பதே இப்படத்தின் கதை. அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்’’ என்றார்.

ஜே.எஸ்.கே. ஃபிலிம் கார்பரேஷன், லியோ விஷன்ஸ் மற்றும் ‘7C’s என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படம் மே 22-ஆம் தேதி ரிலீசாகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சத்யா - டிரைலர்


;