புலி + என்னை அறிந்தால் ‘டச்’சில் புதிய படம்?

புலி + என்னை அறிந்தால் ‘டச்’சில் புதிய படம்?

செய்திகள் 27-Apr-2015 10:28 AM IST Chandru கருத்துக்கள்

‘சதுரங்க வேட்டை’ மூலம் அதிரடி நாயகனாக ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்ற நடிகரும், ஒளிப்பதிவாளருமான ‘நட்டி’ நட்ராஜ் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘புலி’ படத்தின் ஒளிப்பதிவாளராக பிஸியாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்பின் இறுதிக்கட்டத்திற்கு ‘புலி’ வந்திருப்பதால் விரைவில் புதிய படங்களில் நாயகனாக நடிக்க உள்ளாராம் நட்ராஜ். இயக்குனர் பாண்டிராஜிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய ராமு என்பவர், தலக்கோணம் பகுதியில் ‘புலி’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது நட்ராஜிடம் கதை ஒன்றைக் கூறியுள்ளார். அக்கதை அவருக்குப் பிடித்துப்போகவே அதில் நாயகனாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம் நட்ராஜ்.

நட்ராஜுடன் ‘மூடர்கூடம்’ புகழ் ரஜாஜுயும் முக்கிய வேடமொன்றில் நடிக்கும் இப்படத்தில் நாயகியாக நடிக்க ‘என்னை அறிந்தால்’ படத்தின் நாயகிகளில் ஒருவரான பார்வதி நாயரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம். 1980களில் நடப்பதுபோல் கதைக்களம் உருவாக்கப்பட்டிருக்கும் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;