சூர்யாவுடன் இணையும் ‘சதுரங்கவேட்டை’ இயக்குனர்!

சூர்யாவுடன் இணையும் ‘சதுரங்கவேட்டை’ இயக்குனர்!

செய்திகள் 27-Apr-2015 10:23 AM IST VRC கருத்துக்கள்

லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ தயாரிப்பில் ‘அஞ்சான்’ படத்தில் நடித்த சூர்யா, மீண்டும் ‘திருப்பதி பிரதர்ஸ்’ தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை ‘சதுரங்கவேட்டை’ படத்தை இயக்கிய வினோத் இயக்குகிறார். வெங்கட் பிரபு இயக்கித்தில் சூர்யா நடித்துள்ள ‘மாஸ்’ திரைப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிற நிலையில் சூர்யா தற்போது விக்ரம் குமார் இயக்கும் ‘24’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தவிர பாண்டிராஜ் இயக்கும் ‘ஹைகூ’ படத்திலும் நடிக்கிறார் சூர்யா! இப்படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் வினோத் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. இந்தப் படத்திற்கான மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காற்று வெளியிடை - டிரைலர் 2


;