ஜீவாவுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ், நிக்கி கல்ராணி!

ஜீவாவுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ், நிக்கி கல்ராணி!

செய்திகள் 27-Apr-2015 10:11 AM IST Chandru கருத்துக்கள்

‘யான்’ படத்திற்குப் பிறகு புதிய படம் எதிலும் ‘கமிட்’ ஆகாமல் இருந்த நடிகர் ஜீவா, சமீபத்தில் ‘கவலை வேண்டாம்’ எனும் படத்தில் நாயகனாக நடிக்க ஒப்புக்கொண்டார். ‘யாமிருக்க பயமே’ படத்தின் இயக்குனர் டீகே இயக்கும் இப்படத்தை ‘ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட்’ எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க ‘இது என்ன மாயம்’, ‘ரஜினி முருகன்’ படங்களின் நாயகி கீர்த்தி சுரேஷ் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இப்போது கூடுதலாக ‘டார்லிங்’ படத்தின் நாயகி நிக்கி கல்ராணியும் படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிஸியாக இருக்கும் நிக்கியும், கீர்த்தியும் விரைவில் ஜீவா படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருக்கிறார்களாம். தேசிய விருதுபெற்ற நடிகர் பாபி சிம்ஹா ‘கவலை வேண்டாம்’ படத்தில் சிறப்புத் தோற்றம் ஒன்றில் நடிக்கிறாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டீசர்


;