‘காக்கா முட்டை’ மணிகண்டன் தயாரிக்கும் 3 படங்கள்!

‘காக்கா முட்டை’  மணிகண்டன் தயாரிக்கும் 3  படங்கள்!

செய்திகள் 25-Apr-2015 11:16 AM IST VRC கருத்துக்கள்

சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த ‘கௌரவம்’, ‘லட்சுமி வந்தாச்சு’ உள்ளிட்ட வெற்றி படங்களை தயாரித்த ஹிந்து ரங்கராஜனின் பேரன் ரோஹித் ரமேஷ் தனது ‘WTF என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் மூலம், இந்த ஆண்டின் குழந்தைகளுக்கான சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டு 2 தேசிய விருதுகளை பெற்ற ‘காக்கா முட்டை’ படத்தின் இயக்குனர் எம்.மணிகண்டன் மற்றும் பல படங்களில் தயாரிப்பு மேற்பார்வையாளராக பணிபுரிந்த G.A. ஹரிகிருஷ்ணனுடன் இணைந்து 3 படங்களை தயாரிக்கிறார். முதல் படமாக ‘காக்கமுட்டை’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய சுரேஷ் சங்கையா எழுதி இயக்கும் படத்தை தயாரிக்கவுள்ளது. விரைவில் தொடங்கவிருக்கும் இப்படத்திற்கான நாயகன், நாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு தற்போது நடைப்பெற்று வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆண்டவன் கட்டளை - டிரைலர்


;