‘வை ராஜா வை’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா குத்தாட்டம்!

‘வை ராஜா வை’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா குத்தாட்டம்!

செய்திகள் 25-Apr-2015 10:33 AM IST VRC கருத்துக்கள்

‘3’ படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள படம் ‘வை ராஜா வை’. ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் மே 1-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது. கௌதம் கார்த்திக், டாப்ஸி. ப்ரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கும் இப்படத்தில் இயக்குனர்கள் வசந்த், மனோபாலா, எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். மனோபாலா, வசந்த் ஆகியோர் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்க, எஸ்.ஜெ.சூர்யா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார். வழக்கமாக நடிகைகளை தான் படத்தில் குத்தாட்டம் போட வைப்பார்கள் இயக்குனர்கள்! ஆனால் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவை குத்தாட்டம் போட வைத்ததற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது என்கிறார் இப்படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ்! இப்படம் குறித்து இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் மேலும் கூறும்போது, ‘‘ நான் இயக்கிய ‘3’ படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட படம் இது. அட்வென்ஞ்சர் த்ரில்லர் படம். ஆனால் இதில் காதலும் இருக்கிறது. பொதுவாக பெண் இயக்குனர் இயக்கும் படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்ற ஒரு இமேஜ் இருந்து வருகிறது. அந்த இமேஜை மாற்றும் படமாக ‘வை ராஜா வை’ இருக்கும். எனக்கு எப்போதும் சைக்காலஜி விஷயங்களில் அதிக ஆர்வம் உண்டு! அதன் அடிப்படையில் தான் ‘3’ படத்தின் கதை அமைத்திருந்தேன். அதைப் போன்று இப்படத்திலும் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லி இருக்கிறேன். அது ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்’’ என்றார்.

ஒளிப்பதிவுக்கு வேல்ராஜ், இசைக்கு யுவன் சங்கார் ராஜா, படத்தொகுப்புக்கு வி.டி.விஜயன் என பெரும் கலைஞ்ரகளின் கூட்டணியில் அமைந்துள்ள இப்படத்தினை தமிழகமெங்கும் ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் வெளியிடுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹர ஹர மஹாதேவகி - பாடல் வீடியோ


;