தயாரிப்பாளர் சங்கம் – பரபரப்பு அறிக்கை!

தயாரிப்பாளர் சங்கம் – பரபரப்பு அறிக்கை!

செய்திகள் 24-Apr-2015 1:51 PM IST VRC கருத்துக்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து அதன் தலைவர் எஸ்.தாணு மற்றும் நிர்வாகிகள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் QUBE மற்றும் UFO நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய சேவை வரியினை செலுத்துவதாக தயாரிப்பாளர்களிடமிருந்து பணம் வசூலிக்கின்றனர். ஆனால் அந்த தொகையினை அரசுக்கு செலுத்திகிறார்களா இல்லையா என்று தெரியவில்லை. மேலும் தயாரிப்பாளர்களின் திரைப்படங்களை திரையிடும்போது அந்தந்த தயாரிப்பாளரிடம் அனுமதி பெறாமல் விளம்பரங்களை வெளியிடுகின்றன்ர்.

இதன் மூலம் ஒரு பெரும் வருவாய் QUBE மற்றும் UFO நிறுவனங்களுக்கும், இன்னொரு பகுதி திரைத்துறை சார்ந்த வேறு ஒரு அமைப்புக்கும் போய்க் கொண்டிருக்கிறது. அதிலிருந்து தயாரிப்பாளருக்கு ஒரு சிறு தொகை கூட கிடைப்பதில்லை. மேலும் தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் திரைப்படங்கள் வெளியிடும்போது கட்டணமாக ஒரு பெரும் தொகையை வசூலிக்கின்றனர். தங்களது நிறுவனங்கள் மட்டுமே தொழில் செய்ய வேண்டுமென்ற தனி நபர் ஆதிக்கத்தை உருவாக்கி தயாரிப்பாளர்களின் உரிமைகளை முடக்கி வருகிறார்கள். அவர்கள் செய்யும் வேலைக்கான ஊதியத்தை பெற்றுக்கொண்டு தயாரிப்பாளர்களின் லாபத்தை தன்வசப்படுத்தும் QUBE மற்றும் UFO நிறுவனங்களின் செயல்பாடுகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக எங்கள் கோரிக்கைகள் அடங்கிய அமைதி ஊர்வலத்தை நடத்த ஏற்பாடு செய்திருந்தோம்.

ஆனால் மேற்கண்ட கூட்டத்தை நடத்த போக்குவரத்து நெரிசல் காரணமாக அனுமதி கிடைக்காத காரணமாக தற்காலிகமாக ஊர்வலம் தள்ளி வைக்கப்பட்டது. மேலும் அதற்கான இடம் மற்றும் முறையான அனுமதி பெற்ற பின் அரசின் ஒப்புதலோடு மொத்த திரையுலகின் சார்பில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். அதற்கான தேதி இடம் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கனவே கனவே வீடியோ பாடல் - ஸ்கெட்ச்


;