அஜித், ஷாலினிக்கு வாழ்த்துக்கள்!

அஜித், ஷாலினிக்கு வாழ்த்துக்கள்!

செய்திகள் 24-Apr-2015 11:06 AM IST VRC கருத்துக்கள்

காதல் திருமணம் செய்துகொண்ட சினிமா பிரபலங்களில் அஜித் - ஷாலினி தம்பதியர் எல்லோருக்கும் பிடித்தமான ஒரு காதல் ஜோடி! முதலில் ஒரு பெண் குழந்தைக்கு பெற்றோர்களாகி விட்ட இந்த காதல் தம்பதியருக்கு சமீபத்தில் தான் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு நேற்று ஆத்விக் அஜித்குமார் என்று பெயர் சூட்டி மகிழ்ந்த இந்த காதல் தம்பதியர் இல்லற வாழ்க்கையில் இணைந்த நாள் இன்று (ஏப்ரல்-24). அதாவது, அஜித், ஷாலினி இருவரும் காதல் திருமணம் செய்துகொண்ட நாள் இது. வரிசையாக வெற்றிப் படங்களை கொடுத்தும், அன்பான மனைவி, குழந்தைகளுடன் இனிமையான குடும்ப வாழ்க்கையிலும் மற்றவர்களுக்கு உதாரண தம்பதியராக விளங்கி வரும் அஜித், ஷாலினி தம்பதியருக்கு ‘டாப் 10 சினிமா’ தனது இனிய திருமண நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;