2017ல் ஃபாஸ்ட் அன்ட் ஃபியூரியஸ் 8ம் பாகம்?

2017ல் ஃபாஸ்ட் அன்ட் ஃபியூரியஸ் 8ம் பாகம்?

செய்திகள் 24-Apr-2015 11:11 AM IST Chandru கருத்துக்கள்

வெளியான 17 நாட்களில் 6500 கோடி ரூபாய் வசூல் செய்து உலகையே ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கும் ‘ஃபாஸ்ட் அன்ட் ஃபியூரியஸி’ன் 7ஆம் பாகத்தைத் தொடர்ந்து தற்போது 8ஆம் பாகத்திற்கான வேலைகளும் தடபுடலாக நடந்து கொண்டிருக்கின்றன. நாயகன் பால் வாக்கரின் திடீர் மரணம் காரணமாக 7ஆம் பாகத்தோடு ‘ஃபாஸ்ட் அன்ட் ஃபியூரியஸ்’ தொடர் முடிவுக்கு வருகிறது என்றொரு பேச்சு முதலில் அடிபட்டது. ஆனால், தற்போது 7ஆம் பாகத்திற்குக் கிடைத்திருக்கும் அதிரிபுதிரி வரவேற்பால் தயாரிப்பாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனராம். அதோடு 7ஆம் பாகத்தின் முடிவில் வில்லன் ஜேஸன் ஸ்டேத்தம் உயிருடன் இருப்பதுபோல் காட்டியிருப்பதால், 8ஆம் பாகம் வரும் எனவும் சொல்லப்பட்டது.

தற்போது அந்த செய்தியை உறுதிப்படுத்தியிருக்கிறார் அப்படத்தின் நாயகர்களில் முக்கியமானவரான வின் டீசல். சமீபத்தில் விழா ஒன்றில் கலந்துகொண்ட வின் டீசலிடம் 8ஆம் பாகம் குறித்து கேட்டபோது, ‘‘ஃபாஸ்ட் அன்ட் ஃபியூரியஸின் 8ஆம் பாகம் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும்’’ என்று கூறியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;