ஆர்யாவை இயக்கும் ‘அமரகாவியம்’ இயக்குனர்!

ஆர்யாவை இயக்கும் ‘அமரகாவியம்’ இயக்குனர்!

செய்திகள் 24-Apr-2015 11:00 AM IST Chandru கருத்துக்கள்

ஆர்யா தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ‘யட்சன்’, அனுஷ்காவுடன் இணைந்து ‘இஞ்சி இடுப்பழகி’ என ஒரே நேரத்தில் 3 படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இது தவிர எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஷாம் ஆகியோருடன் இணைந்து ஆர்யா நடித்திருக்கும் ‘புறம்போக்கு என்கிற பொதுடைமை’ படம் வரும் மே 15ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. தவிர, ஜெயம் ரவியின் ‘ரோமியோ ஜூலியட்’, விஷ்ணுவின் ‘இன்று நேற்று நாளை’ ஆகிய படங்களில் கெஸ்ட் ரோலிலும் நடித்து வருகிறார் ஆர்யா.

இந்த படங்கள் தவிர்த்து தற்போது புதிய படம் ஒன்றிலும் நடிக்க ஆர்யாவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளதாம். ஆர்யாவின் தம்பி சத்யா நாயகனாக நடித்து வெளிவந்த ‘அமர காவியம்’ படத்தின் இயக்குனர் ஜீவா சங்கர் ஆர்யாவை சந்தித்து கதை கூறியுள்ளாராம். அரசியல் சம்பந்தப்பட்ட அக்கதை ஆர்யாவுக்கு ரொம்பவும் பிடித்துப்போகவே அதில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு ஜீவா சங்கர் இயக்கும் படத்தில் ஆர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனக்கு பட்டங்கள் பிடிக்காது - ரகுல் ப்ரீத்


;